இஃது, குற்றியலிகரம் புணர்மொழியுள் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) யகரம் வருவழி உகரக்கிளவி துவர தோன்றாது- யகர முதல்மொழி வரும் இடத்து நிலைமொழி உகரம் முற்றத் தோன்றாது; இகரம் குறுகும் -(ஆண்டு) ஓர் இகரம் (வந்து) குறுகும். எ - டு : நாகியாது , வரகியாது , தெள்கியாது , எஃகியாது ,கொக்கியாது , குரங்கியாது என வரும். இதனானே, ஆகார ஈறு அகரம் பெற்றாற் (உயிர் மயங்கியல் - சூத்திரம்,24) போல ஆறு ஈற்றுக் குற்றியலுகரமும் இகரம் பெற்று யகர முதல்மொழியோடு புணருமாறு கூறிற்றாயிற்று. (5)
|