இஃது, இடை நின்ற இரண்டிற்கும் முடிபு கூறுகின்றது. (இ-ள்) இடை ஒற்றுத்தொடரும் ஆய்தத்தொடரும் நடை - இடை ஒற்றுத்தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும் ஆய்தத்தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும் நடக்கும் இடத்து - ஆ இயல என்மனார் புலவர் - மேற்கூறிய இயல்பு முடிபினை உடைய என்று சொல்லுவர் புலவர். எ - டு : தெள்குகால் ; சிறை, தலை, புறம் எனவும் எஃகு கால்; சிறை, தலை, புறம் எனவும் வரும். (8)
|