இஃது, மென்றொடர் மொழிக்கு எய்தியது ஒரு மருங்கு மறுக்கின்றது. (இ-ள்) மெல்லொற்று வலியா மரப்பெயரும் உள - மெல்லொற்று வல்லொற்றாய்த் திரியாது முடியும் மரப்பெயரும் உள. எ - டு : குருந்தங்கோடு; செதிள், தோல், பூ எனவும்; புன்கங்கோடு; செதிள், தோல், பூ எனவும் வரும். மற்று , இது நிலைமொழித்தொழிலை நிலைமொழி விலக்குமாதலின்1 சாரியை வகுப்பவே முடியும் பிற எனின், இது நிலைமொழியின் உள்தொழிலாகலின் அவ்வாறு விலக்குண்ணாதென்பது கருத்து. 1. நிலைமொழித் தொழில், அத்துப்பேறு, நிலைமொழித் தொழிலை விலக்கல், 24 ஆம் நூறபாவில் விதித்த அகரத்தை விலக்கல். (11)
|