இஃது, மென்றொடர் மொழியுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்குதலும் எய்தியதன் மேல் சிறப்பும் கூறுகின்றது. (இ-ள்) ஒற்று நிலை திரியாது அக்கொடு வரும் அ கிளை மொழியும் உள என மொழிப - ஒற்று (முன் நின்ற) நிலை திரியாது அக்குச்சாரியையோடு(ம் பிற சாரியையோடும்) வரும் அக்கிளையெழுத்து மொழியும் உள என்று சொல்லுவர்.(ஆசிரியர்) (ஆசிரியர்.) எ - டு : குன்றக்கூகை, மன்ற பெண்ணை என வரும். `உம்' மையால், கொங்கத்துழவு, வங்கத்து வாணிகம் என அத்துப்பெற்றன. `நிலை' என்றதனான், ஒற்றுநிலை திரியா அதிகாரத்துக்கண் இயைபு வல்லெழுத்து விலக்குக. `அக்கிளைமொழி' என்றதனால், பார்ப்பனக்கன்னி, பார்ப்பனச்சேரி என அன்னும் அக்கும் வந்தன கொள்க. (13)
|