3. குற்றுகரப் பொதுப் புணர்ச்சி

எண்ணுப்பெயர்

420.எண்ணுப் பெயர்க்கிளவி உருபியல் நிலையும்.

இஃது, குற்றுகர ஈற்று எண்ணுப்பெயரொடு பொருட்பெயர் முடிக்கின்றது.

(இ-ள்) எண்ணுப்பெயர் கிளவி உருபு இயல் நிலையும் - எண்ணுப்பெயராகிய சொற்கள் உருபுபுணர்ச்சியின் இயல்பின் கண்ணே (நின்று அன்பெற்று) முடியும்.

எ - டு :ஒன்றன்காயம், இரண்டன்காயம்; சுக்கு, தோரை,பயறு என வரும்.

(14)