4. குற்றுகரச் சிறப்புப் புணர்ச்சி

`வண்டு', `பெண்டு' என்னும் சொற்கள்

421.வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும்.

இஃது, மென்றொடர் மொழியுள் சிலவற்றிற்குப் பிற முடிபு கூறுகின்றது.

(இ-ள்) வண்டும் பெண்டும் இன் ஒடு சிவணும் - வண்டு என்னும் சொல்லும் பெண்டு என்னும் சொல்லும் இன்சாரியையோடு பொருந்தி முடியும்.

எ - டு : வண்டின்கால், பெண்டின்கால் என வரும்.

(15)