`பெண்டு'
இஃது, மேற்கூறியவற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேல் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று.
(இ-ள்) பெண்டு என் கிளவிக்கு அன்னும் வரையார் - பெண்டு என்னும் சொல்லிற்கு (இன்னேயன்றி) அன் சாரியையும் வரையார்.
எ - டு :பெண்டன்கை என வரும்.