இஃது, மேற்கூறிய ஈற்றுள் சுட்டுமுதல் ஈற்று உகரத்திற்கு ஒரு வழி அல்வழி முடிபு கூறுகின்றது. (இ-ள்) முன் உயிர் வரும் இடத்து- (அவற்றுள் சுட்டு முதல் ஆய்தத் தொடர்மொழி உகர ஈறு தன்) முன்னே உயிர் வரும் இடத்து, ஆய்தப்புள்ளி மன்னல் வேண்டும் - ஆய்தப்புள்ளி (முன்பு போலக் கெடாது) நிலைபெற்று முடிதல் வேண்டும், அல்வழியான - அல்வழிக்கண். எ - டு : ஆஃதடை, இஃதடை, உஃதடை, ஆடை, இலை என ஒட்டுக. `முன்' என்றதனான், வேற்றுமைக்கண்ணும் உயிர் முதல்மொழி வந்த இடத்து அஃதடைபு , அஃதாட்டம் என ஆய்தம் கெடாமை கொள்க. (18)
|