இஃது, மேலனவற்றிற்குப் பிறகணத்தோடு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) ஏனை முன்வரின் தான் நிலையின்று - (அச் சுட்டுமுதல் உகர ஈறு உயிர்க்கணம் ஒழிந்த) பிற கணங்கள் முன்வரின் அவ் ஆய்தம் நிலையின்றி முடியும். எ - டு : அது கடிது, இது கடிது, உது கடிது, சிறிது, தீது; பெரிது, ஞான்றது,நீண்டது, மாண்டது; யாது, தீது, வலிது என வரும். (19)
|