இஃது, ஆறு ஈற்றுக் குற்றியலுகரத்திற்கு, அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) அல்லது கிளப்பின் - அவ்வழியைச் சொல்லும் இடத்து, எல்லா மொழியும் - ஆறு ஈற்றுக் குற்றியலுகரமும், சொல்லிய பண்பின் இயற்கை ஆகும் - மேற்சொல்லிய பண்பினையுடைய இயல்பாய் முடியும். எ - டு : நாகு கடிது, வரகு கடிது, தெள்கு கடிது, எஃகு கடிது, குரங்கு கடிது; சிறிது. தீது, பெரிது என வரும். `எல்லா மெழியும்' என்றநனால், வினைச் சொல்லும் வினைக்குறிப்புச் சொல்லும் இயல்பாய் முடிந்தன கொள்க. கிடந்தது குதிரை, கரிது குதிரை கன வரும். `சொல்லிய' என்றதனான் இருபெயரொட்டுப் பண்புத்தொகை முடிபு கொள்க. காட்டுக் கானம், குருட்டெருது என வரும். `பண்பின்' என்றதனான், ஐ என்னும் சாரியை பெற்று வரும் அல்வழி முடிபும் கொள்க. அன்றைக்கூத்தன், பண்டைச்சான்றார் ஓர் யாட்டை யானை, மற்றை யானை என வரும். (20)
|