இஃது, அவ்வாறீற்றின் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்) வல்லொற்றுத் தொடர் மொழி - வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகரம், வல்லெழுத்து மிகும் - (வல்லெழுத்து வருவழி) வல்லெழுத்து மிக்கு முடியும். எ - டு : கொக்குக்கடிது; சிறிது தீது என வரும். (21)
|