இதுவும், அவ்வாறீற்றின் ஒன்றன்கண் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர நின்ற இடைச் சொற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) சுட்டு சினை நீடிய மென்றொடர் மொழியும் - சுட்டாகிய சிலையெழுத்து நீண்ட மென்றொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், யா வினா முதலிய மென்றொடர்மொழியும் - யா என்னும் வினா முதலாகிய மென்றொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், வல்லெழுத்து இயற்கை ஆ இயல் திரியா - (மேற்கூறிய வல்லெழுத்து இயற்கையாகிய அவ் இயல்பில் திரியா(து) முடியும். எ - டு : ஆங்குக்கொண்டான், ஈங்குக்கொண்டான், ஊங்குகொண்டான், யாங்குக்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும்.1 `இயற்கை' என்றதனான், அக் குற்றுகர ஈற்று வினையெச்ச முடிபு கொள்க. செத்துக்கிடந்தான், இருந்துகொண்டான் என வரும். (22) 1.மென்றொடர்மொழிக் குற்றியலுகர ஈற்று வினைஎச்சம் இயல்பாம்; இருந்து கொண்டான்.(நச்.)
|