4. குற்றுகரச் சிறப்புப் புணர்ச்சி

யாங்கு என்பதற்கு மேலும் ஒரு முடிபு

429.யாவினா மொழியே இயல்பு மாகும்.

இஃது, மேலவற்றுள் ஒன்றன்மேல் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) யா வினா மொழி இயல்பும் ஆகும் - (அவற்றுள்) யா வினா மொழி (மேற்கூறிய விகாரமேயன்றி) இயல்பாயும் முடியும்.

எ - டு : யாங்கு1 கொண்டான்; சென்றான்,தந்தான்,போயினான் என வரும்.

(23)

1.யாங்கு - எப்படி