4. குற்றுகரச் சிறப்புப் புணர்ச்சி

திசைப்பெயர்

432.இருதிசை புணரின் ஏயிடை வருமே.

இஃது , குற்றுகர ஈற்றுத் திசைப்பெயர்க்கு அல்வழிக்கண் வேறு முடிபு கூறுகின்றது.

இருதிசை புணரின் ஏ இடைவரும் - இரண்டு பெருந்திசைகள் (தம்மிற்) புணரின் ஏ என்னும் சாரியை இடைவந்து புணரும்.

எ - டு : வடக்கே தெற்கு ; கிழக்கே மேற்கு என வரும்.

(26)