இதுவும், எண்ணுப்பெயருக்கு முடிபு கூறுதல் நுதலிற்று. ஆயிரம் வரினும் - (மேற்கூறிய பத்து என்னும் எண்ணுப்பெயர் முன்னர் ஒன்று முதலாகிய எண்ணுப்பெயரேயன்றி) ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர் வந்தாலும், ஆ, இயல் திரியாது - மேல் ஈறு கெட்டு இன் பெற்ற இயல்பில் திரியாதே முடியும். எ - டு : பதினாயிரம் என வரும். (30)
|