5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

அதன்கண் `ஒன்று' `இரண்டு' என்னும் சொற்கள்

439.முதலீ ரெண்ணி னொற்று ரகரம் ஆகும்
உகரம் வருதல் ஆவயி னான.

இஃது, மேற்கூறிய முடிபிற்கு உரியதொன்று உணர்த்துதல் நுதலிற்று.

முதல் ஈர் எண்ணின் ஒற்று ரகரம் ஆகும் - (அவற்றுள்) முதற்கண் நின்ற இரண்டு எண்ணின் ஒற்று ரகார ஒற்றாய், ஆ வயின் உகரம் வருதல் - அவ்விடத்து உகரம் வருக.

எ - டு : ஒருபஃது என வரும்.

(33)