5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

`இரண்டு' என்பதற்கு மேலும் ஒரு முடிபு

440.இடைநிலை ரகரம் இரண்டென் எண்ணிற்கும்1
நடைமருங் கின்றே பொருள்வயி னான.

இதுவும் அது.

இரண்டு என் எண்ணிற்கும் இடைநிலை ரகரம் பொருள்வயின் நடைமருங்கு இன்று- அவ் இரண்டு என்னும் எண்ணிற்கும் இடை நின்ற ரகாரம் அம்மொழி பொருளாமிடத்து நடக்கும் இடம் இன்றிக் கெடும்.

எ - டு : இருபஃது என வரும்.

(34)

1.எண்ணிற்கு.(நச்.)