இஃது, மேற்கூறிய ஒன்று முதல் ஒன்பான்களோடு அளவுப் பெயரும் நிறைப் பெயரும் முடியுமாறு கூறுகின்றது. அளந்து அறி கிளவியும் நிறை என் கிளவியும் தோன்றும் காலை - (மேற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பான்களின் முன்னா) அளந்து அறியப்படும் அளவுப் பெயர்ச்சொல்லும் தோன்றுங்காலத்து, கிளந்த இயல அவ் ஒன்று முதல் ஒன்பான்கள் மேல் பத்து என்பதோடு புணரும் வழிக் கிளந்த இயல்பினவாய் முடியும். எ - டு : ஒரு கலம், இருகலம் ; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும்; ஒரு கழஞ்சு, இரு கழஞ்சு; தொடி, பலம் எனவும் வரும். `தோன்றுங்காலை' என்றதனான், அவ் வெண்களின்முன் எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது நின்ற எண்ணுப்பெயரையெல்லாம் இவ்விதியும் பிறவிதியும் எய்துவித்து முடித்துக்கொள்க. ஓரொன்று, ஓரிரண்டு ; ஈரிரண்டு; ஒரு முந்திரிக்கை; இரு முந்திரிக்கை; ஒரரைக்கால் ; ஈரரைக்கால் ; ஒரு கால், ஓரரை, ஈரரை, ஒரு முக்கால், இரு முக்கால் என ஒட்டிக்கொள்க. (40)
|