இஃது , மாட்டேறு எய்தாதற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. மூன்றன் ஒற்று வந்தது ஒக்கும் - மூன்றாம் எண்ணின்கண் நின்ற னகார ஒற்று வருமொழியாய் வந்த அளவுப் பெயர் நிறைப்பெயரின் முத(லி)ல் வந்த ஒற்றோடு ஒத்த ஒற்றாய் முடியும். எ - டு :முக்கலம் ; சாடி, தூதை, பானை எனவும் ; முக்கழஞ்சு; தொடி,பலம் எனவும் வரும். மாட்டேற்றானே நாற்கலம் ; சாடி, பானை எனவும்; நாற்கழஞ்சு: தொடி பலம் எனவும் வரும். (41)
|