5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

அதன்கண் `மூன்று' என்னும் சொல்

448.ஐந்த னொற்றே மெல்லெழுத் தாகும்.

இதுவும் அது.

ஐந்தன் ஒற்று மெல்லெழுத்து ஆகும் - ஐந்தாவதன்கண் நின்ற நகர ஒற்று ( மேல் வருகின்ற வருமொழி முதல் வல்லெழுத்திற்கு ஏற்ற) மெல்லெழுத்தாய் முடியும்.

எ - டு : ஐங்கலம் ; சாடி , தூதை பானை எனவும் ; ஐங்கழஞ்சு; தொடி,பலம் எனவும் வரும்.

(42)