5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

அதன்கண் `மூன்று' என்னும் சொல்

449.க ச த ப முதன்மொழி வரூஉங் காலை.

இஃது , மேற்கூறிய மூன்றற்கும் ஐந்தற்கும் வருமொழி வரையறுக்கின்றது.

க ச த ப முதல்மொழி வரும் காலை - (மூன்றன் ஒற்று வந்தது ஒப்பதூஉம் ஐந்தன் ஒற்று மெல்லெழுத்தாவதூஉம் அவ் வளவுப்பெயர் நிறைப்பெயர் ஒன்பதினும் வன்கணமாகிய) க ச த ப முதல் மொழிகள் வந்த இடத்து.

எ - டு : மேன் மாட்டேற்றானே, அறுகலம் ; சாடி, தூதை, பானை எனவும் வரும்.

ஏழு குற்றுகர ஈறன்மையின், மாட்டேறு ஏலாதாயிற்று.

(43)