இதுவும், மேல்மாட்டேற்றொடு ஒவ்வா வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. ஐந்தும் மூன்றும் நமவரும் காலை - ஐந்து என்னும் எண்ணும் மூன்று என்னும் எண்ணும் நகர முதல் மொழியும் மகர முதல்மொழியும் வருங்காலத்து , ஒற்று இயல் நிலை வந்தது ஒக்கும் - தங்கண் நின்ற ஒற்று நடக்கும் நிலைமை (சொல்லின்) அவ் வருமொழி முத(லி)ல் வந்த ஒற்றொடு ஒத்த ஒற்றாய் முடியும். எ - டு : முந்நாழி, மும்மண்டை; ஐந்தாழி, ஐம்மண்டை என வரும். மூன்றும் ஐந்தும் என்னாத முறையன்றிய கூற்றினான், நானாழி என்னும் முடிபின்கண் விகாரமாகிய னகரத்தின் முன்னர் வருமொழி நகரத் திரிபும், அது காரணமாக நிலைமொழி னகரக்கேடும் கொள்ளப்பட்டன. (45)
|