`மூன்று' `நான்கு' `ஐந்து' முன் வகர முதன்மொழி
இதுவும் அது.
ஐந்தன் ஒற்று முந்தையது கெடும் - ஐந்தாம் எண்ணின்கண் நின்ற நகர ஒற்று (வகரம் வந்தால் ) முன் நின்ற வடிவு கெட்டு முடியும்.
எ - டு : ஐவட்டி என வரும்.
`முந்தை', என்றதனால் நகர ஒற்றுக் கெடாது அவ்வகரமாய்த் திரிந்து ஐவ்வட்டி என்றும் ஆம்.