இதுவும் அது. முதல் ஈர் எண்ணின்முன் உயிர் வரு காலை - முற்பட்ட இரண்டு எண்ணின்முன் உயிர் முதல்மொழி வருங்காலத்து , உகரக் கிளவி தவல் என மொழிப - உகரமாகிய எழுத்துக் கெடும் என்று சொல்லுவர் (புலவர்), முதல்நிலை ஆவயின் நீடல் - (அவ்வெண்ணின் முதற்கண்) நின்ற எழுத்துக்கள் அவ்விடத்து நீண்டு முடியும். எ - டு : ஓரகல் , ஈரகல் , ஓருழக்கு , ஈருழக்கு என வரும் (49)
|