இதுவும் அது. மூன்றும் நான்கும் ஐந்து என் கிளவியும் - மூன்று என்னும் எண்ணும் நான்கு என்னும் எண்ணும் ஐந்து என்னும் எண்ணுச் சொல்லும் , தோன்றிய வகரத்து இயற்கையாகும் (மேல்) தோன்றி முடிந்த வகரத்து இயற்கையாய் மூன்றன்கண் வகர ஒற்றாயும் நான்கின்கண் லகர ஒற்றாயும் ஐந்தன்கண் ஒற்றுக் கெட்டும் முடியும். எ - டு : முவ்வகல் , முவ்வுழக்கு எனவும் ; நாலகல் , நாலுழக்கு எனவும் ; ஐயகல் , ஐயுழக்கு எனவும் வரும். `தோன்றிய' என்றதனான் , மேல் மூன்று என்பது முதல் நீண்ட இடத்து நிலைமொழி னகர ஒற்றுக் கெடுத்துக் கொள்க. (50)
|