இதுவும் அது. ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது சாரியை மொழி இன் பெறல் வேண்டும் - ஒன்பது என்னும் எண்ணின் இறுதி தன் வடிவு நிலை திரியாது சாரியை மொழியாகிய இன் பெற்று முடிதல் வேண்டும். எ - டு : ஒன்பதின்கலம் ; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும், கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். `உருபு' என்றதனான் , ஒன்பதிற்றகல் என்புழி இரட்டிய றகரமாகக் கொள்க. (53)
|