அதன்கண் `மூன்று' என்னும் சொல்
இஃது, மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று.
மூன்றன் ஒற்று நகாரம் ஆகும் - மூன்றாம் எண்ணின்கண் நின்ற னகர ஒற்று நகர ஒற்றாகும்.
எ - டு : முந்நூறு என வரும்.