இதுவும் அது. நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா - நான்கு என்னும் எண்ணும் ஐந்து என்னும் எண்ணும் தம் ஒற்றுக்கள் நிலை திரியாது முடியும். எ - டு : நானூறு , ஐந்நூறு என வரும். `மெய்' என்றதனால் , நானூறு என்புழி வருமொழி ஒற்றாகிய நகரக்கேடு கொள்க. இன்னும் அதனானே, ஒற்றின்றி ஐநூறு என வரும் முடிபும் கொள்க. (56)
|