இஃது , அவ்வொன்று முதல் ஒன்பான்கள் முன் ஆயிரம் என்பது வருங்கால் முடிபு கூறுகின்றது. ஆயிரக்கிளவி வரும் காலை முதல் ஈர் எண்ணின் உகரம் கெடும் - ஆயிரம் என்னும் சொல் (ஒன்று முதல் ஒன்பான்கள்) முன் வருங்காலத்து முதல் ஈர் எண்ணின்கண் பெற்று நின்ற உகரம் கெட்டு முடியும். எ - டு : ஓராயிரம் , இராயிரம் என வரும். (58)
|