இதுவும், மாட்டேற்றோடு ஒவ்வா முடிபு கூறதல் நுதலிற்று. மூன்றன் ஒற்று வகாரம் ஆகும் - மூன்றாம் எண்ணின்கண் நின்ற னகார ஒற்று வகர ஒற்றாய் முடியும். எ - டு : முவ்வாயிரம் என வரும். `முதனிலை' என்றதனான் , முதல் நீண்டு வகர ஒற்றுக்கெட்டு மூவாயிரம் என்றும் வரும். (60)
|