5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

`நான்கு' முன் ஆயிரம்

467.நான்க னொற்றே லகாரம் ஆகும்.

இதுவும் அது.

நான்கன் ஒற்று லகாரம் ஆகும் - நான்காம் எண்ணின்கண் நின்ற னகர ஒற்று லகர ஒற்றாய் முடியும்.

எ - டு : நாலாயிரம் என வரும்.

(61)