5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

`ஐந்து' முன் ஆயிரம்

468.ஐந்த னொற்றே யகாரம் ஆகும்

இதுவும் அது.

ஐந்தன் ஒற்று யகாரம் ஆகும் - ஐந்தாம் எண்ணின்கண் நின்ற நகர யகர ஒற்றாய் முடியும்.

எ - டு : ஐயாயிரம் என வரும் . முன்னர் இவ்வாறு ஓதாமையான் , ஐயகல், ஐயுழக்கு (என்பவை ) உடம்படுமெய் பெற்றன.

(62)