இஃது, மெய்ம்மயக்கத்திற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. எல்லா எழுத்தும் தம் இயல் கிளப்பின் - எல்லா மெய்யெழுத்தும் மொழியிடையின்றித் தம் வடிவின் இயல்பைச் சொல்லுமிடத்து , மெய்ம்மயக்கநிலை மானம் இல்லை - மெய்ம்மயக்க நிலையின் மயங்கிவருதல் குற்றம் இல்லை. எ - டு: "வல்லெழுத் தியையின் டகார மாகும்" (புள்ளி மயங் -7) என வரும். இதனை அம் மெய்ம்மயக்கத்து வைக்கவெனின். இது வழுவமைதி நோக்கி மொழிமரபின் கண்ணதாயிற்று. (14)
|