இஃது, ஒன்று முதல் எட்டு ஈறாகிய எண்கள் அடையடுத்த பத்தினொடு ஒன்று முதல் ஒன்பான்களைப் புண்ரக்கின்றது. ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி - ஒன்று முதல் எட்டு ஈறாகப் பத்து என்னும் எண் ஊர்ப்பட்ட சொற்கள் , ஒன்று முதல் ஒன்பாற்கு - அவ்வொன்று முதல் ஒன்பான்கள் வருமொழியாய் வந்து புணருமிடத்து , நின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும் - (ஆண்டு) நின்ற ஆய்தம் கெட்டு முடிதல் வேண்டும். ஒற்று இடை மிகும் - (கெட்ட வழி இனவொற்றாய் ஓர் தகர) ஒற்று இடைமிக்க முடியும். எ - டு : ஒருபத்தொன்று, இருபத்தொன்று ஒருபத்திரண்டு , இருபத்திரண்டு, ஒருபத்து மூன்று, இருபத்து மூன்று என ஒட்டிகொள்க. `நின்ற' என்றதனான் , மேல் ஒரு பதிற்றுக்கலம் என்னும் முடிபிற்கு இன்பேறும் கொள்க. (69)
|