இஃது , அவ்வடையடுத்த பத்தினோடு ஆயிரத்தினைப் புணர்க்கின்றது. ஆயிரம் வரின் சாரியை இன் ஆம் - (அவ் வொன்று முதலாகிய பத்தூர் கிளவி முன் )ஆயிரம் என்பது வரின் இடை வந்து புணருஞ் சாரியை இன் ஆம் , ஆ வயின் ஒற்று இடை மிகுதல் இல்லை - அவ்விடத்து(முன்கூறிய) ஒற்று இடை மிகுதல் இன்றி முடியும். எ - டு : ஒருபதினாயிரம் , இருபதினாயிரம் என ஒட்டுக. `ஆவயின்' என்றதனான் , ஒருபதிற்றுக்கலம் என்னும் முடிபிற்கு உகரமும் வல்லெழுத்துப் பேறும் கொள்க. (70)
1.(பாடம்) இன்னென் சாரியை (நச்.)
|