நூன்மரபு

2. மாத்திரை

ஓரெழுத்தே மூன்று மாத்திரையாகாமை

5.மூவள பிசைத்தல் ஓரெழுத் தின்றே.

இஃது, உயிரளபெடை யெழுத்திற்கு மாத்திரை கூறுதல் நுதலிற்று.

மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்று - மூன்று மாத்திரையாக ஒலித்தல் இயல்பாகிய ஓர் எழுத்திற்கு இல்லை. (விகாரமாகிய இரண்டு கூடியதற்கு உண்டு.)

(5)