மொழி மரபு

4. எழுத்துக்களின் இயக்கம்

மகரங் குறுகுமிடம்

52.னகாரை முன்னர் மகாரம் குறுகும்.

இஃது, "அரையளபு குறுகல் மகர முடைத்து" [நூன்மரபு 13] என்பதற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

னகாரை முன்னர் மகாரம் குறுகும் - (மேற்கூறப்பட்ட) னகாரத்து முன்வந்த மகாரம் மாத்திரை குறுகி நிற்கும்.

(19)