மொழி மரபு

5. போலி

போலி எழுத்துக்கள்

55.அகரம் உகரம் ஒளகாரம் ஆகும்.

இதுவும் அது.

அகரம் உகரம் -அகரமும் உகரமும் கூட்டிச் சொல்ல, ஒளகாரம் ஆகும் - ஒளகாரம்போல ஆகும்.

எ - டு: ஒளவை , அஉவை1 எனக் கண்டுகொள்க . அது கொள்ளற்க.

(22)

1. கவுதாரி - கௌதாரி.