இதுவும் அது. அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் அகரத்தின் பின்னர் இகரமேயன்றி யகரமாகிய புள்ளியும், ஐ என் நெடுஞ்சினை- ஐ எனப்பட்ட நெட்டெழுத்தான் , மெய்பெறத் தோன்றும் - அவை வடிவுபெறத் தோன்றும். எ - டு: ஐவனம், அய்வனம்1 என வரும். `மெய்பெறத் தோன்றும்' என்றதனான் , அகரத்தின் பின்னர் உகரமேயன்றி வகரப்புள்ளியும் ஒளகாரம்போல வருமெனக் கொள்க என்றவாறு . ஒளவை அவ்வை எனக் கண்டுகொள்க. (23)
1. அய்வனம் , அய்யர் என்றாற்போல்வன , செய்யுளில் எதுகை நோக்கி வரும் திரிபு வடிவங்களாகும்.
|