இதுவும் ஓர் போலியெழுத்து உணர்த்துதல் நுதலிற்று. இறுதி இகர யகரம் விரவும் - இகரவீற்று மொழிக்கண் யகரமும் (அதுபோல ) இகரமும் விரவிவரும். எ - டு: நாய் நாஇ2 எனக் கண்டுகொள்க (விரவும் என்றதனால்) அவை யிரண்டும் கொள்க என்றவாறு. (25)
1. இம்பர் உம்பர் என்றாற் போல்வன காலவகை இடவகைகளான் மயங்குமாதலின், இவற்றின் முதற்கண் நிற்பது யாதோ இறுதிக்கண் நிற்பது யாதோ என்னும் ஐயம் நீக்குதற்கு மாட்டேற்றாக இச் சூத்திரங் கூறினார் என்பது. தொல்காப்பியச் சூத்திர விருத்தி. 2. நாயி என்பது பண்டைய வழக்காயிருந்திருக்கலாம். (பாவாணர்)
|