மொழி மரபு

6. மொழிமுதல் எழுத்துக்கள்

மொழிமுதலாகும் உயிர்கள்

59.பன்னீ ருயிரும் மொழிமுத லாகும்.

இஃது உயிரெழுத்து மொழிக்கு முதலாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

பன்னீர் உயிரும் மொழிமுதல் ஆகும் - பன்னிரண்டு உயிரெழுத்தும் மொழிக்கு முதலாம்.

எ - டு: அடை, ஆடை, இடை, ஈயம், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐவனம், ஒளி, ஓளி, ஒளவியம் என வரும்.

(26)