இஃது, உயிரளபெடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. நீட்டம் வேண்டின் - நீண்ட மாத்திரையையுடைய அளபெடை எழுத்துப்பெற வேண்டின், அ அளபு உடைய கூட்டி எழூஉதல் - மேற்கூறிய இரண்டளபுடைய நெடிலையும் ஓர் அளபுடைய குறிலையும் (பிளவுபடாமற்) கூட்டி யெழூஉக, என்மனார் புலவர் - என்று சொல்லுவர் புலவர். (6)
|