6. மொழிமுதல் எழுத்துக்கள்
யகரம் ஆகாரத்துடனே மொழிமுதலாதல்
இதுவும் அது.
ஆவோடு அல்லது யகரம் முதலாது-ஆகாரத்தோடு அல்லது யகர முதலாகாது.
எ - டு: யான் என வரும்.
யவனர் என்றாற்போல்வன விலக்கினவும் வருமாலெனின், அவை ஆரியச் சிதைவென்று மறுக்க.