இஃது, குற்றியலுகரம் மொழிக்கு முதலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் - குற்றியலுகரம் முறைப் பெயரிடத்து, ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் - ஒற்றாய்நின்ற நகரத்தின் மேலாய நகரத்தோடு மொழிக்கு முதலாம். எ - டு: நுந்தை என வரும். இவ்வாறு முதலாக்கம் கூறவே, மொழிமுதல் குற்றியலுகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் கூறியவாறாயிற்று. இடம் நுந்தை என்னும் முறைப்பெயர். பற்றுக்கோடு நகரமிசை நகரம். (34)
1 நுந்தை உகரங் குறுகி மொழிமுதற்கண் வந்த தெனினுயிர்மெய் யாமனைத்தும் சந்திக் குயிர்முதலா வந்தணையு மெய்ப்புணர்ச்சி யின்றி மயலணையு மென்றதனை மாற்று". இவற்றை விரிந்துரைத்து விதியும் விலக்கும் அறிந்துகொள்க என்பது நன்னூல் மயிலைநாதருரை மேற்கோள்.(105) 1 காது, கட்டு, கத்து, முருக்கு, தெருட்டு என்பன முற்றுகரமும் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற்போல நுந்தை என்று இதழ்குவித்து முற்றக் கூறியவிடத்தும், இதழ்குவியாமற் குறையக் கூறியவிடத்தும் ஒரு பொருளே தந்தவாறு காண்க. நுந்தாய் என்பதோ எனின். அஃது இதழ்குவித்தே கூறவேண்டுதலிற் குற்றுகரமன்று இயலென்றதனான் இடமும் பற்றுக்கோடும் இரண்டிற்கும் வேறுபாடின்றென்று கொள்க. இதனானே மொழிக்கு முதலாம் எழுத்துத் தொண்ணூற்று நான்கென்றுணர்க. (நச்) காது, கட்டு முதலியவை முற்றுகரமாயின் ஏவல் வினையும், குற்றுகரமாயின் தொழிற்பெயருமாகும். (பாவாணர்)
|