இஃது, மேலதற்கு ஓர் புறனடை. முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாது-(அம்முதற்கட் குற்றியலுகரம் ஆண்டு இதழ்குவித்துக் கூறும் வழி) முற்றுகரத்தோடு பிற உகரம்போலப் பொருள் வேறுபடாது ; (யாண்டெனின்) அப்பெயர் மருங்கின் நிலை இயலான - அம்முறைப்பெயரிடத்துத் தான் நிற்றற்கண். எ - டு: நாகு எனவும் நகு எனவும் குறுகியும் குறுகாதும் நின்ற உகரங்கள்போல, நுந்தை என்று குறுக்கமாய வழியும், இதழ் குவித்துக்கூறக் குறுகாதவழியும், பொருள் வேறுபடாதவாறு அறிக. இனி "இரட்டுறமொழிதல்" என்பதனால், பொருள் என்றதனை இடனும் பற்றுக்கோடும் ஆக்கி,பிற உகரங்கள்போல ஈண்டை உகரங்கள் இடனும் பற்றுக்கோடும் வேறுபடா என்பது கொள்க. (35)
|