7. மொழியிறுதி எழுத்துக்கள்

எகர வுயிர் மெய்யோ டீறாகாமை

71.எ என வருமுயிர் மெய்யீறாகாது.

இஃது, எகரம் தானே நின்றவழியின்றி மெய்யோடு கூடி ஈறாகாதென வரையறை கூறுதல் நுதலிற்று.

எ என வரும் உயிர் - எ என்று சொல்ல வரும் உயிர், மெய் ஈறு ஆகாது - தானே ஈறாவதன்றி மெய்யோடு இயைந்து ஈறாகாது.

(38)