7. மொழியிறுதி எழுத்துக்கள்

ஏ, ஓ, ஞகரமெய்யொன்றுடன் ஈறாகாமை

73.ஏ, ஓ, எனுமுயிர் ஞகாரத் தில்லை.

இதுவும் வரையறை.

ஏ ஓ எனும் உயிர் ஞகாரத்து இல்லை - ஏ ஓ என்று சொல்லப்படும் உயிர் (தாமே நின்றும் பிற மெய்களோடு நின்றும் ஈறாவதன்றி) ஞகாரத்தோடு ஈறாவதில்லை.

தாமேயாதல் முன்னே காட்டப்பட்டன. பிறமெய்களோடு ஈறாவனவற்றுள் வழக்கிறந்தனவொழிய இறவாதன வந்தவழிக் கண்டு கொள்க.1

(40)

1. உரிஞ, உரிஞா, உரிஞி, உரிஞீ, உரிஞு, உரிஞூ , இவை எச்சமும் வினைப்பெயரும் பற்றி வரும். `அஞ்ஞை, மஞ்ஞை இவை பெயர் ஏனை ஐந்தும் விலக்கப்பட்டன' உரிஞோ என்பது `கடிசொல்லில்லை' என்பதனாற் கொள்க. (நச்.)