7. மொழியிறுதி எழுத்துக்கள்

சகர வுகரம் இருமொழிக்கு ஈறாதல்

75.உச்ச காரம் இருமொழிக் குரித்தே.

இதுவும் ஒரோவழி வரையறை.

உச் சகாரம் இரு மொழிக்கு உரித்து - உகரத்தோடு கூடிய சகரம் இருமொழிக்கு அல்லாது (பலமொழிக்கு ஈறாகாது.)

எ - டு:உசு, முசு என வரும், பசுவென்பது ஆரியச் சிதைவு.

(42)