இஃது, மொழிக்கு ஈறாகா உயிர்மெய்யும் ஒரோவழி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இல - மொழிக்கு ஈறாகாது நின்ற உயிர்மெய்களெல்லாம் தம் பெயர் கூறும்வழி ஈறாதற்கு ஒழிபு இல. எஞ்சிய உயிர்மெய்யாவன: ஒளகாரம் ககார வகாரங்களை ஒழிந்த மெய்யோடு இயைந்த உயிர்மெய்யும், எகரம் எல்லா மெய்யோடும் இயைந்த உயிர்மெய்யும், ஒகரம் நகரம் ஒழிந்த மெய்யோடு இயைந்த உயிர்மெய்யும்; ஏகார ஓகாரம் ஞகாரத்தோடு இயைந்த உயிர்மெய்யும்; உ ஊகாரம் நகர வகரங்களோடு இயைந்த உயிர்மெய்யும் என இவை. எ - டு: தம் பெயர்க்கு (ஈறு) ஆமாறு; ஙௌக் களைந்தார் எனவும், கெக்களைந்தார் எனவும், கொக் களைந்தார் எனவும், ஞேக்களைந்தார் எனவும், ஞோக்களைந்தார் எனவும்,நு£க் களைந்தார் எனவும், நூக் களைந்தார் எனவும், வுக் களைந்தார் எனவும், வூக் களைந்தார் எனவும் வரும்; எல்லாம் என்றதனான், மொழிக்கு ஈறாய்நின்ற உயிர்மெய்களும் தம் பெயர் கூறும்வழியும் ஈறாய் என்று கொள்க. கக்களைந்தார், கா வலிது எனவும். அக் களைந்தார், ஆ வலிது எனவும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. தன்னை உணர நின்றவழி, மொழிகட்கு இது கருவியாக ஈற்றகத்து முடிபு ஒன்றின முடித்தலாற் கொள்க. (44)
|