7. மொழியிறுதி எழுத்துக்கள்

நகரமெய் இருமொழிக்கு ஈறாதல்

79.உச்ச கார மொடு நகாரஞ் சிவணும்.

இதுவும் மொழிவரையறை.

உசகாரமொடு நகாரம் சிவணும் - உகரத்தோடு கூடிய சகாரத்தோடே நகாரம் பொருந்தி அஃது இரு மொழிக்கு ஈறாயவாறுபோலத் தானும் இருமொழிக்கு ஈறாம்.

எ - டு: பொருந், வெரிந் என வரும்.

(46)